pushpa allu arjun

Advertisment

அலா வைகுந்தபுரமலோ படத்தைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் சுகுமார் இயக்கத்திலும் த்ரிவிக்ரம் இயக்கத்திலும் நடிக்க திட்டமிட்டிருக்கிறார். இதில் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கரோனாவால் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் படம் வெளியாக உள்ளது.

சமீபத்தில் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக இப்படத்தில் அல்லு அர்ஜூனின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயர் 'புஷ்பா' என்பதை வெளியிட்டது படக்குழு. மைத்ரி சினிமாஸ் பெரும் பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்தில் போலந்து நாட்டைச் சேர்ந்த கியூபா என்பவர் ஒளிப்பதிவு செய்ய, டிஎஸ்பி இசையமைக்கிறார்.

முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜூனும், ஹீரோயின் ராஷ்மிகா மந்தானாவும் நடிக்க இருப்பதாக முன்பு தெரிவிக்கப்பட்டது. அதில் அல்லு அர்ஜூனின் ஃபர்ஸ்ட் லுக்கை வைத்து பார்க்கும்போதே இவர்கள் இருவரின் கதாபாத்திரமும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்பது தெரிகிறது. அதேபோல நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், அதைப் படக்குழு தற்போது வரை உறுதிப்படுத்தவில்லை.

Advertisment

இந்நிலையில் இந்தப் படத்தில் ஆறு நிமிடத்திற்கு ஒரு சண்டை காட்சி இடம்பெறவுள்ளதாகவும் அதை ஆறு கோடி செலவில் இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்களைப் பயன்படுத்தி உருவாக்க உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.