/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/169_12.jpg)
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தின் இசைப் பணிகளை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் 'புஷ்பா' படம் ரஷ்ய மொழியில் வருகிற 8ஆம் தேதி (08.12.2022) வெளியாகவுள்ளது. அதற்கான ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இப்படத்தின் சிறப்பு காட்சிகள் ரஷ்யாவின் மாஸ்கோவில் டிசம்பர் 1ம் தேதி மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் டிசம்பர் 3ம் தேதியும் நடிகர்கள் மற்றும் படக்குழு முன்னிலையில் திரையிடப்படவுள்ளன. அதோடு, ரஷ்யாவின் 24 நகரங்களில் நடைபெற இருக்கும் ஐந்தாவது இந்தியத் திரைப்பட விழாவின் தொடக்க நாளில் ’புஷ்பா’ திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)