/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/274_18.jpg)
புஷ்பா வெற்றிக்குப் பிறகு சுகுமார் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘புஷ்பா 2 தி ரூல்’ நேற்று (05.12.2024) பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், ஃபஹத் ஃபாசில் வில்லனாகவும் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்க பின்னணி இசையில் சாம் சி.எஸ் இணைந்து பணியாற்றியிருக்கிறார். இப்படத்தின் முன்பதிவு மட்டுமே ரூ.100 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது.
இதையடுத்து ஹைதரபாத்தில் படத்தின் சிறப்பு காட்சியின் போது திரையரங்கிற்கு வருகை தந்த அல்லு அர்ஜூனால் கூட்டம் அதிகமாகி, படம் பார்க்க வந்த ரேவதி(39) என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அக்குடும்பத்தினருக்கு ஆதரவாக நிற்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்பு குழு மற்றும் சம்பந்தப்பட்ட திரையரங்கம் மீது ஹைதராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக தெலங்கானா அரசு வரும் காலங்களில் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அறிவித்தது.
இதனிடையே மும்பையில் இப்படத்தின் திரையிடலின் போது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பாந்த்ரா பகுதியில் ஒரு திரையரங்கில் இடைவெளி முடிந்து இரண்டாம் பாதி ஓடிக்கொண்டிருக்கும் அடையாளம் தெரியாத ஒரு நபர் ஸ்ப்ரே ஒன்றை அடித்துள்ளார். இதனால் பார்வையாளர்களுக்கு இருமல், தொண்டை எரிச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. பின்பு அவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து படம் 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அறிந்த காவல் துறையினர் திரையரங்கிற்கு வந்து விசாரித்து விட்டு சென்றுவிட்டனர். வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்பு எந்தவித தொந்தரவுமின்றி படம் திரையிடப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)