/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/36_51.jpg)
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் வெளியான படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
கடந்த மாதம் அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஒரு முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புபெற்றது. இப்படத்தில் சாய்பல்லவி நடித்துவருவதாகவும் கூறப்படுகிறது. பழங்குடியின பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் காடுகள் அதிகம் இருக்கும் பகுதியில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் படப்பிடிப்புக்கு கலந்து கொள்ளச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதாகத்தகவல் வெளியாகியுள்ளது. அப்பேருந்தில் படக்குழுவினர் பலரும் இருந்த நிலையில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த விபத்து ஹைதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் உள்ள நர்கெட்பல்லி அருகே நடந்துள்ளதாகத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)