30-க்கும் மேலான மொழிகளில் வெளியாகும் புஷ்கர்-காயத்ரி-யின் வெப் சீரிஸ் ; ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு

Pushkar-Gayatri's web series published in over 30 languages

தமிழ் திரையுலகில் படங்களை தாண்டி தற்போது வெப் சீரிஸ்களுக்கான வரவேற்புஅதிகரித்து வருகிறது. அந்த வகையில் ‘விக்ரம் வேதா’ இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி எழுதி, தயாரித்து வருகிற சீரிஸ் 'சூழல்'. பிரம்மா மற்றும் அருண்சரண் இருவரும் இணைந்து இயக்கும் இந்த சீரிஸில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது குறித்தான அறிவிப்பை சமீபத்தில் அமேசான் நிறுவனம் அறிவித்திருந்தது. அதோடு சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டது.

இந்நிலையில் 'சூழல்' சீரிஸ் குறித்த ரீலீஸ் தேதியை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த சீரிஸின் முதல் சீசன் 'சுழல்: தி வோர்டெக்ஸ்', வருகிற ஜூன் 17-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இன்வெஸ்டிகேட்டிவ் ட்ராமா ஜானரில் உருவாகியுள்ள இந்த சீரிஸ் இந்திய மொழிகள் உட்பட 30-க்கும் மேலான பல்வேறு மொழிகளில் உலகெங்கும் வெளியாகும் எனத்தெரிவித்து மோஷன் போஸ்டரையும் அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

actor kathir ACTOR PARTHIBAN aishwarya rajesh pushkar gayathri Suzhal - web series
இதையும் படியுங்கள்
Subscribe