Advertisment

அதிரடி திருப்பங்களுடன் புஷ்கர்-காயத்ரி வெப் சீரிஸின் ட்ரைலர் வெளியீடு

Pushkar-Gayatri web series trailer released

தமிழ் திரையுலகில் படங்களை தாண்டி தற்போது வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ‘விக்ரம் வேதா’ இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி எழுதி, தயாரித்து வருகிற சீரிஸ் 'சுழல்'. பிரம்மா மற்றும் அருண்சரண் இருவரும் இணைந்து இயக்கும் இந்த சீரிஸில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது குறித்தான அறிவிப்பை சமீபத்தில் அமேசான் நிறுவனம் அறிவித்திருந்தது. அதோடு சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டது.

Advertisment

இந்நிலையில் 'சுழல்' சீரிஸின் முதல் சீசனான 'சுழல்: தி வோர்டெக்ஸ்' ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்தின் தங்கச்சி காணாமல் போகிறாள், அவளை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை கொஞ்சம் அரசியல் கலந்து த்ரில்லிங்காக விவரிக்கும் வகையில் இந்த ட்ரைலர் வெளியாகியுள்ளது. இன்வெஸ்டிகேட்டிவ் ட்ராமா ஜானரில் உருவாகியுள்ள இந்த சீரிஸ் இந்திய மொழிகள் உட்பட 30-க்கும் மேலான பல்வேறு மொழிகளில் உலகெங்கும் ஜூன் 17-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

actor kathir aishwarya rajesh pushkar gayathri Suzhal - web series
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe