Advertisment

டேவிட் வார்னரை நடிக்க அழைப்பு விடுத்த பிரபல இயக்குனர்!

david warner

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஓப்பனிங் பேட்ஸ்மேனுமான டேவிட் வார்னர் டிக்டாக்கில் தனது குடும்பத்துடன் வீடியோ பதிவேற்றி ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

Advertisment

அண்மையில்கூட இந்திய பாடல்களுக்கு டிக்டாக் செய்து இந்திய ரசிகர்களின் கவனத்தை பெற்றார் டேவிட் வார்னர். குறிப்பாக அல்லு அர்ஜூனின் நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான ‘அலா வைகுந்தபுரமலோ’ படத்திலிருந்து ‘புட்ட பொம்மா’ பாடலுக்கு தனது குடும்பத்துடன் வார்னர் நடனமாடியது நல்ல வைரலானது.

Advertisment

ஐபிஎல் பிரான்சைஸில் ஹைதரபாத் அணிக்காக ஆடுவதால், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் டேவிட் வார்னருக்கு ஃபாலோவர்ஸ் ஏறிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற 'போக்கிரி' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி வசனத்தைப் பேசி டிக்-டாக் செய்து வெளியிட்டார். அதுவும் ஐபிஎல் போட்டியில் தான் விளையாடும் ஹைதராபாத் அணியின் உடையில் இந்த டிக்-டாக் வீடியோவை செய்திருந்தார்.

இந்த டிக் டாக் வீடியோவை பதிவேற்றி "என்ன படம் என்று தெரிகிறதா? நான் முயற்சி செய்தேன்" என்று தெரிவித்தார். உடனே மகேஷ் பாபு மற்றும் பூரி ஜெகந்நாத் ரசிகர்கள் பலரும் இதை ட்ரெண்ட் செய்யத்தொடங்கினார்.

டேவிட் வார்னரின் இந்தப் பதிவுக்கு 'போக்கிரி' படத்தின் இயக்குனர் பூரி ஜெகந்நாத் "டேவிட்.. இதுதான் நீங்கள்.. உறுதியும் ஆக்ரோஷமும்.. இந்த வசனம் உங்களுக்குத்தான் சரியாக பொருந்தும். நீங்கள் ஒரு நடிகராகவும் சிறப்பாக நடிப்பீர்கள். என் படத்தில் நீங்கள் ஒரு காட்சியில் கேமியோ ரோல் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்" என்று தனது வாழ்த்தில் குறிப்பிட்டார்.

பூரி ஜெகந்நாத்தின் பதிவுக்கு பதிலாக டேவிட் வார்னர் "முயற்சி செய்கிறேன் சார், சன் ரைசர்ஸ் ரிலீஸ் அல்லது விநியோகம் செய்கிறதா என்று பார்க்கவேண்டும்" என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe