மீண்டும் நித்தியானந்தாவை வம்பிழுக்கும் ‘பப்பி’ பட ட்ரைலர்...

யோகி பாபு, வருண் நடிப்பில் தயாராகும் பப்பி படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இருந்த சம்யுக்த ஹெக்டே இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

puppy

இந்த படத்தை முரட்டு சிங்கிள் என்பவர் இயக்குகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தின் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் ஆர்.ஜே. பாலாஜியை வைத்து வெளியிட்டனர். அதில் ஒரு பக்கத்தில் நித்யானந்தாவின் படமும், இன்னொரு பக்கத்தில் ஜானி சின்ஸ் என்ற பார்ன் ஸ்டாரின் புகைப்படம் இடம்பெற்றது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

நித்தியானந்தா தரப்பும் இந்த படத்திற்கு எதிராக நோட்டீஸ்விட்டது. இந்த விஷயத்தையும் படத்தின் ட்ரைலரில் பயன்படுத்தியிருக்கிறது படக்குழு.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/kt0RG0PQieI.jpg?itok=MWb2tWxZ","video_url":" Video (Responsive, autoplaying)."]}

puppy yogibabu
இதையும் படியுங்கள்
Subscribe