/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/745_1.jpg)
காங்கிரஸ் கட்சியைச் சேர்நதவரும்,பஞ்சாபி பாப் பாடகருமானசித்து மூஸ் வாலாகொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.தனதுபாடல்கள் மூலம் துப்பாக்கிக் கலாச்சாரம், கேங்ஸ்டர் கலாச்சாரம் உள்ளிட்டவற்றைப் புகழ்ந்து பாடி அதனை ஊக்குவிப்பதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். இருப்பினும் இவருக்குஏராளமான ரசிகர்கள்உள்ளனர். இதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பரில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவருக்கு சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மான்ச தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மிகட்சி வேட்பாளரிடம் தோல்வியைத்தழுவினார்.
இதனைத்தொடர்ந்து பஞ்சாபில்பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றது. இதையடுத்து, பகவந்த் மான்தலைமையிலான அரசு முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை வாபஸ் பெற்று வருகிறது. அந்த வகையில், அண்மையில் 420 முக்கிய பிரமுகர்களுக்கு அளித்து வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.அதில் பஞ்சாபி பாப் பாடகர் சித்து மூஸ் வாலாவும் ஒருவர்.
இந்நிலையில் பாடகர்சித்து மூஸ் வாலா மான்சா மாவட்டத்தில் நேற்று காரில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். அதில் அவருடன் காரில் சேர்ந்து பயணித்த இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்துதகவலின்பேரில் சம்பவஇடத்திற்கு வந்த போலீசார் மூவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் பாடகர் சித்து மூஸ் வாலாவரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாடகர் சித்து மூஸ் வாலாவின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட அடுத்த நாளே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)