Advertisment

புனித் ராஜ்குமாரின் கடைசி பட டீசர்; கண்கலங்கிய ரசிகர்கள்

puneeth rajkumar starring james film goes viral

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் இந்தியத் திரைப்பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இயக்குநர் சேத்தன் குமார் இயக்கத்தில் 'ஜேம்ஸ்' என்ற படத்தில் நடித்து வந்த நிலையில் தான் அவர் உயிரிழந்தார். இருப்பினும் இப்படத்தின் பணிகளை முடித்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.இப்படத்தில் புனித் ராஜ்குமாரின் கதாபாத்திரத்திற்கு அவரது அண்ணன் சிவ ராஜ்குமார் டப்பிங் பேசியுள்ளர்.குடியரசு தின விழாவைமுன்னிட்டு இப்படத்தின் போஸ்டர் வெளியாகிபலரையும் கவர்ந்தது.

Advertisment

இந்நிலையில் ஜேம்ஸ் படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின்கடைசி படம் என்பதால் இப்படத்தின் டீசரை பலரும் கண்கலங்கி பார்த்து வருகின்றனர். மேலும் ரசிகர்கள் பலர் படத்தின் டீசர் நல்லா இருக்கு ஆனால் புனித் ராஜ்குமார் இல்லாதது வருத்தமளிக்கிறதுஎன தெரிவித்துள்ளனர்.

Advertisment

puneeth rajkumar James movie
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe