Skip to main content

புனித் ராஜ்குமாரின் கடைசி பட டீசர்; கண்கலங்கிய ரசிகர்கள்

Published on 11/02/2022 | Edited on 11/02/2022

 

puneeth rajkumar starring james film goes viral

 

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் இந்தியத் திரைப்பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இயக்குநர் சேத்தன் குமார் இயக்கத்தில் 'ஜேம்ஸ்' என்ற படத்தில் நடித்து வந்த நிலையில் தான் அவர் உயிரிழந்தார். இருப்பினும் இப்படத்தின் பணிகளை முடித்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் புனித் ராஜ்குமாரின் கதாபாத்திரத்திற்கு அவரது அண்ணன் சிவ ராஜ்குமார் டப்பிங் பேசியுள்ளர். குடியரசு தின விழாவை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர் வெளியாகி  பலரையும் கவர்ந்தது. 

 

இந்நிலையில் ஜேம்ஸ் படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் டீசரை பலரும் கண்கலங்கி பார்த்து வருகின்றனர். மேலும் ரசிகர்கள் பலர் படத்தின் டீசர் நல்லா இருக்கு ஆனால் புனித் ராஜ்குமார் இல்லாதது வருத்தமளிக்கிறது என தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிவராஜ்குமாருக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க கோரிக்கை

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
BJP's request to Election Commission against Shivarajkumar

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. 

அந்த வகையில் கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா, கர்நாடாகாவில் ஷிமோகா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இதற்காக அவரை ஆதரித்து சிவராஜ்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் மக்களவை தேர்தல் முடியும்வரை சிவராஜ் குமாரின் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பாஜக சார்பில் கோரிக்கை வைத்துள்ளது. பாஜக ஓபிசி மோர்ச்சா பிரிவின் கர்நாடக மாநிலத் தலைவர் ரகு, எழுதியிருந்த கடிதத்தில், “கர்நாடாகாவில் ஒரு முக்கிய நபராக இருக்கும் சிவராஜ்குமார், தற்போது காங்கிரஸ் கட்சிக்காக மாநிலம் தழுவிய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் சினிமா மூலம் மக்கள் மத்தியில் பொதுவான ஆளுமை என்ற பெயரை பெற்றுள்ளார். ஜனநாயக முறையில், அவரது உரிமையை நாங்கள் மதிக்கிறோம். 

அதே சமயம், தேர்தல் நேரத்தில் தேவையற்ற ஆதாயங்கள் அல்லது செல்வாக்கைத் தடுப்பது மற்றும் சமநிலையைப் பராமரிக்க வேண்டியது அவசியம். அவரது குறிப்பிடத்தக்க செல்வாக்கு மற்றும் பிரபலத்தை கருத்தில் கொண்டு, திரையரங்குகள், தொலைக்காட்சி சேனல்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவைகளில் தேர்தல் முடியும்வரை சிவராஜ்குமார் நடித்த படங்கள், விளம்பரங்களை ஒளிப்பரப்பபடுவதை தடை செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

விஜயகாந்த் நினைவிடத்தில் கலங்கி நிற்கும் திரைப் பிரபலங்கள்

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
shivarajkumar sac ms bhaskar pays tribute to vijayakanth memorial

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

இந்த நிலையில், விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத பல திரைப் பிரபலங்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில், விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, விஜயகாந்த்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், விஜயகாந்த் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். 

இதனைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், விஜயகாந்த்தின் நினைவிடத்தில் மனம் உடைந்து அஞ்சலி செலுத்தினார். மேலும் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் கண் கலங்கியபடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.