Advertisment

"என்னுடைய 7 வருட உழைப்பை கெடுத்துடாதீங்கனு இயக்குநர் சொன்னார்" - நடிகர் புகழ் பேச்சு!

Pugazh

Advertisment

ட்ரைடன்ட்ஸ் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிப்பில், ஹரிஹரன் இயக்கத்தில் குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமார் நாயகனாக நடித்துள்ள படம் 'என்ன சொல்ல போகிறாய்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அஷ்வின் குமார், தேஜஸ்வினி, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="15f3a149-c6ae-4e47-b41e-1026f5f5ace4" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_60.jpg" />

இந்நிகழ்வில் நடிகர் புகழ் பேசுகையில், "உயரத்துக்கு ஏணியா இருக்கும் என்னோட பேன்ஸுக்கு நன்றி. ரவி சார் ஆபீஸ் கூப்பிட்டு செக் கொடுத்து, என்னோட தயாரிப்பில் படம் நடிக்க வேண்டும் என்று சொன்னார். அதன் பிறகு 5 மாதம் கூப்பிடவில்லை. பின், இந்தப் படத்தில் அஷ்வின் நாயகன் என்றார்கள். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இது என் 7 வருட உழைப்பு, தயவு செய்து காமெடி பண்ணி கெடுத்து விடாதீர்கள் என இயக்குநர் கெஞ்சிக் கேட்டார் அதனால் நான் எதுவும் காமெடி செய்யவில்லை. இந்தப் படத்தில் நடித்தது ஜாலியாக இருந்தது. இப்படத்தில் பாடல்கள் அனைத்துமே ஹிட்டாகியுள்ளன. படமும் கண்டிப்பாக வெற்றி பெறும்" எனக் கூறினார்..

Vijay tv Pugazh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe