Skip to main content

'பீஸ்ட்' பேனரில் முதல்வர் புகைப்படம்; பரபரப்பை கிளப்பும் கட்அவுட்டுகள்

Published on 08/04/2022 | Edited on 08/04/2022

 

puducherry cm rangasamy and vijay beast poster goes viral

 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர்  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம். கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

 

இந்நிலையில்  'பீஸ்ட்' படம் வெளியாவதை ஒட்டி ரசிகர்கள் பேனார்கள் வைத்தும், போஸ்டர்கள் ஒட்டியும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில்  புதுச்சேரி முழுவதும் வைக்கப்பட்டுள்ள 'பீஸ்ட்' பேனர்களில் முதல்வர்  ரங்கசாமியின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அண்மையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சென்னை பனையூரில் உள்ள விஜய் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரசிகர்கள் பீஸ்ட் பேனர்களில்  வைத்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரவுள்ள நிலையில் பீஸ்ட் பேனரில் விஜய் மற்றும் முதல்வர் ரங்கசாமி படங்கள் இடம்பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்