Advertisment

நடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து, லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் வெளியிட்டுள்ளபடம் "மிக மிக அவசரம்". நடிகை ஸ்ரீபிரியங்கா பெண் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் கடந்த நவம்பர் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.

Advertisment

miga miga avasaram

பெண் காவலர்களுக்கு பணியில் நேரும் சிரமங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தைப் பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். பெண்கள்படும் சிரமத்தை அப்படியே நமக்கு வெளி காட்டிய நடிகையின் நடிப்பையும் பலரும் பாராட்டினார்கள்.

செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜூ, இப்படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்காவை படத்தில் ஒரு பெண் காவலரை நடிப்பில் கொண்டு வந்திருப்பதாக நேரில் அழைத்துப் பாராட்டினார்.

Advertisment

அதேபோல இந்த படத்தை பார்த்த புதுச்சேரி முதலைமைச்சர் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி, நடிகை ஸ்ரீபிரியங்காவுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

miga miga avasaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe