/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ikk.jpg)
கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குநர்வி.ஜே. கோபிநாத் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெற்றிபெற்ற படம் ‘ஜிவி’. இப்படத்திற்குத் திரைக்கதை எழுதிய பாபு தமிழ் தற்போது புதுமுக நடிகர்களை வைத்து ‘க்’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன், YG மகேந்திரன், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிக்கின்றனர். கவாஸ்கர் இசையமைக்கும் இப்படத்தை தர்மராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கால்பந்தாட்ட வீரனுக்குஏற்படும் உளவியல் சிக்கலையும், அதைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளையும் மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. புதுவகை உளவியல் ஃபேண்டஸி ஜானரில் உருவாகியுள்ள ‘க்’ திரைப்படம், வரும் டிசம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)