Advertisment

பதற்றத்தை உருவாக்கும் உதயநிதியின் ‘சைக்கோ’ ட்ரைலர்!

உதயநிதி ஸ்டாலின் - மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'சைக்கோ'. அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

Advertisment

udayanithi stalin

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மூத்த ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் உருவாக இருந்த இப்படம், பின்னர் சில காரணங்களால் விலக, பிசியின் உதவி ஒளிப்பதிவாளர் தன்வீர் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையே இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதேபோல இந்த படத்திலிருந்து உன்ன நெனச்சு என்கிற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்திருந்தது.

Advertisment

இதைதொடர்ந்து அண்மையில் இப்படத்திலிருந்து இரண்டாவது பாடலான ‘நீங்க முடியுமா’ வெளியாகியுள்ளது. இந்த பாடலையும் சித் ஸ்ரீராம் பாட, கபிலன் எழுதியுள்ளார். இளையராஜா முதன் முறையாக ஒரு திரைப்படத்திற்காக தனது வீட்டிலேயே ஸ்டூடியோ அமைத்து இசயமைத்து இந்த பாடலுக்குதான் என்று சொல்லப்படுகிறது. இன்று மதியம் 12 மணிக்கு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று அறிவித்ததைபோன்றே சைக்கோ ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஒரு நிமிடம் 37 நொடிகள் நீளம் கொண்ட ட்ரைலராக உள்ளது.

இப்படம் ஜனவரி 24ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/SDZCXPBYHY0.jpg?itok=xS1VtIzT","video_url":" Video (Responsive, autoplaying)."]}

psycho udhayanithi stalin
இதையும் படியுங்கள்
Subscribe