உதயநிதி ஸ்டாலின் - மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'சைக்கோ'. அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மூத்த ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் உருவாக இருந்த இப்படம், பின்னர் சில காரணங்களால் விலக, பிசியின் உதவி ஒளிப்பதிவாளர் தன்வீர் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையே இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இப்படம் வரும் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்த நிலையில் இன்னும் படத்தின் பணிகள் முடிவுபெறாமல் இருப்பதால் அடுத்த வருடம் ஜனவரி 24ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.