வெங்கட் பிரபு நாக சைதன்யா படம் - படப்பிடிப்பிற்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்

Protest against Naga Chaitanya’s film in Karnataka over bar set up near temples

வெங்கட் பிரபு தற்போது நாக சைதன்யாவை வைத்து 'என்.சி 22' படத்தை இயக்கி வருகிறார். ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கும் இப்படத்தில் க்ரீத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேலுகோட் பகுதியில் நடைபெற்று வந்துள்ளது. படப்பிடிப்பிற்காக அங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலுக்கு அருகில் மதுக்கடை செட் ஒன்று படக்குழு அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அந்த மதுக்கடை செட்டை அகற்ற கோரியும் படப்பிடிப்பை நிறுத்த கோரியும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த செட் கோவிலுக்கு அருகில் சில விதிகளை மீறி அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிறகு அந்த செட் அப்புறப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

venkat prabhu
இதையும் படியுங்கள்
Subscribe