'ஆதிபுருஷ்' படத்தில்நடித்துமுடித்துள்ளபிரபாஸ், தற்போது இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகி வரும் 'ப்ராஜெக்ட் கே' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்கிறார். இப்படத்தை பெரும் பொருட்செலவில் அஸ்வின் தத் தயாரிக்கிறார்.
அமிதாப்பச்சனின் பிறந்தநாளையொட்டிப்ராஜெக்ட் கே படக்குழுவினர் புதிய போஸ்டரைவெளியிடிருந்தநிலையில், அது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றது. மேலும் அந்த போஸ்டரில் ‘அழியாத தன்னிகரற்ற சாதனையாளர்’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. அமிதாப் பச்சனும், பிரபாஸும் இணைந்து நடிப்பதால்இந்தபடத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.