/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Vadivelu-Featured-Image.jpg)
வடிவேலு நடிப்பில் உருவான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து இம்சை அரசன் 24ஆம் புலிகேசி என்ற பெயரில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டு சென்னையில் ரூ.6 கோடி செலவில் சரித்திர கால அரங்குகள் அமைத்து இயக்குனர் சிம்புதேவன் படப்பிடிப்பை தொடங்கினார். இப்படப்பிடிப்பில் பத்து நாட்கள் நடித்த வடிவேலு இயக்குனருடன் கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து விலகினார். இதனால் படகுழுக்கு நஷ்டம் ஏற்பட்டு வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் சங்கம் வடிவேலுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டதற்கு பதில் அளித்த வடிவேலு பட வேலைகளை தொடங்குவதில் தாமதம் செய்ததால் தனக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தொடர்ந்து இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்க இயலாது என்று பதில் அளித்தார்.
இதனால் ஒரு வருடத்துக்கும் மேலாக படப்பிடிப்பு முடங்கி உள்ள நிலையில் படத்துக்காக போடப்பட்ட அரங்குகளும் பிரிக்கப்பட்டு விட்டன. மேலும் தயாரிப்பாளர்கள் சங்கமும் நடிகர் சங்கமும் பல கட்டங்களாக சமரச முயற்சி மேற்கொண்டும் வடிவேலு படத்தில் நடிக்க பிடிவாதம் பிடிப்பதால் ஏற்கனவே அமைக்கப்பட்ட அரங்கில் படப்பிடிப்பு நடக்காததால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு வடிவேலுவிடம் ரூ.9 கோடி நஷ்ட ஈடு பெற்று தரும்படி படக்குழுவினர் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் அணுகினர். இந்நிலையில் இப்பட பிரச்னை குறித்து சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க வேண்டும் என்று கெடு விதித்து ஒரு வாரம் அவகாசம் வழங்கி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதற்கு மறுத்தால் வடிவேல் படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதற்கிடையே நடிகர் வடிவேலு நடிக்க தடை விதித்தாலோ அபராதம் விதித்தாலோ அதை எதிர்த்து அவர் கோர்ட்டுக்கு செல்ல முடிவு செய்து இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)