Skip to main content

தேர்தலில் போட்டியிடும் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி...

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி என்ற பெயரில் ஒரு புது அணி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அணி சார்பில் தலைவர் பதவிக்கு அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா போட்டியிடுகிறார்.
 

producers

 

 

பொருளாளர் பதவிக்கு கே.முரளிதரனும், இரண்டு செயலாளர்கள் பதவிகளுக்கு பி.எல்.தேனப்பன், ஜே.எஸ்.கே சதீ‌‌ஷ்குமார் ஆகியோரும், இரண்டு துணைத்தலைவர்கள் பதவிக்கு ஆர்.கே.சுரே‌‌ஷ், ஜி.தனஞ்செயன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். 

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு கே.ராஜன், ராதாரவி, கே.எஸ்.சீனிவாசன், சித்ரா லட்சுமணன், எச்.முரளி, எஸ்.எஸ்.துரைராஜ், கே.விஜயகுமார், ஆர்.வி.உதயகுமார், மனோஜ்குமார், கே.நந்தகோபால், மனோபாலா, பாபுகணே‌‌ஷ், பஞ்சு சுப்பு, எம்.எஸ்.முருகராஜ், வினோத்குமார், ரங்கநாதன், பஞ்ச் பரத், மதுரை செல்வம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். 

சென்னையில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக திரைப்படங்கள் எடுக்கவும், திரைப்படம் எடுக்காமல் இருக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக வாழவும் உழைப்பதே எங்கள் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனுஷ், விஷால், சிம்பு, அதர்வாவுக்கு ரெட் கார்டு

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

red card for dhanush, vishal, simbu, atharvaa

 

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிலையில், அதில் ஒத்துழைப்பு கொடுக்காத நடிகர்களுடன் பணியாற்றப்போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்பு நடிகர் சங்கத்துடன் கடந்த ஜூலை மாதம் ஆலோசனை கூட்டம் நடத்தி தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்காத நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க முடிவெடுக்கப்பட்டது. அதில், தனுஷ், அமலா பால், லட்சுமி ராய் உள்ளிட்ட 14 நடிகர், நடிகைகள் மீது ரெட் கார்டு கொடுக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. 

 

இதையடுத்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று (14.09.2023) நடைபெற்றது. இதில் தனுஷ், விஷால், சிம்பு, அதர்வா உள்ளிட்ட 4 நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  தனுஷ், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தயாரித்த படத்தில், 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த போது படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குறிப்பிட்டு அவருக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டது. விஷால், தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த போது சங்க பணத்தை முறையாக கையாளாதது தொடர்பாக ரெட் கார்ட் அளிக்கப்பட்டது.

 

சிம்பு மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஏற்கனவே பலமுறை புகார் அளித்த நிலையில் பின்பு தீர்வு காண பேச்சு வார்த்தை நடந்தது. அதிலும் தீர்வு காண முடியாததால் அந்த பிரச்சினையை மேற்கோள்காட்டி அவருக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டது. அதர்வாவுக்கு, தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.

 

 

 

 

Next Story

“நான் பேசும்போது நீ குறுக்கப் பேசாத” - மேடையில் கோபப்பட்ட ராதாரவி!

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

 "You don't interrupt when I'm talking" - Radharavi angry on stage

 

இளையராஜா இசையில் டி.கிருஷ்ணன் தயாரித்திருக்கும் படம் ஸ்ரீஇராமானுஜர். ஆன்மீகத்தில் சமூக புரட்சி செய்த ஸ்ரீஇராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் டி.கிருஷ்ணனே இராமானுஜராக நடித்துள்ளார். மேலும் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

 

இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி கூறுகையில், “இங்கு ஆத்திகம், நாத்திகம் என்று வெவ்வேறு கருத்துகள் பேசப்படுகிறது. அப்படியெல்லாம் பேசக்கூடாது. ஏனென்றால் ஆத்திகம் இல்லாமல் நாத்திகம் கிடையாது. நாத்திகம் இல்லாமல் ஆத்திகம் கிடையாது. அந்த காலத்திலேயே சீர்திருத்தக் கருத்துகளைப் பேசி எல்லோரையும் சமமாக நினைத்தவர்தான் இராமானுஜர். 

 

சீர்திருத்தவாதியாக நடிப்பது மிகவும் கஷ்டமானது. ஒருமுறை எனது தயாரிப்பில் கமல்ஹாசனை நடிக்க வைப்பதற்காக அவரது கால்ஷீட் கேட்டு அவரை சந்திக்கச் சென்றேன். நானும் கமலும் அப்போது நல்ல நண்பர்கள். "உன்னை வச்சு ஒரு படம் எடுக்கணும்" என்று அவரிடம் கேட்டபோது, “இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் படம் ரிலீஸ் ஆகட்டும். அப்புறம் பார்க்கலாம்" என்றவர், "நான் குளத்தில் போட்ட ஆமை மாதிரி வாயை திறந்துகொண்டே இருக்கணும். எப்போ குருவி விழுதோ அப்போ வாயை டக்குன்னு மூடிக் கொள்ளனும்" என்றார். கமல் ஏன் அப்படி சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அவர் பெரிய அறிவாளி. இன்றைக்கு சினிமாவில் நடிகர் திலகம் இல்லையென்றாலும் கமல்ஹாசன் இருக்கிறார் என்று திருப்திப்பட்டுக்கொள்ளலாம். 

 

நான் சொல்லித்தான் இதில் அவர் நடித்தார் என ஒய்.ஜி சொன்னார். அப்படியெல்லாம் யாரையும் திரி போல தூண்டிவிட முடியாது என்று ராதாரவி பேசிக்கொண்டிருக்கும் போது மேடையில் உட்கார்ந்திருந்த ஒய்.ஜி.மகேந்திரன் குறுக்கிட்டார். அதற்கு நான் பேசும் போது நீ குறுக்கப் பேசாத என்றார் ராதாரவி. பேசுவதை ஒழுங்கா பேசு என்றார் ஒய்.ஜி.மகேந்திரன். இது லேசான சலசலப்பை ஏற்படுத்தியது.