producer va durai asking help for his medical treatment

Advertisment

தமிழ் சினிமாவில் 'எவர்கிரீன் மூவி இன்டர்நேஷனல்' என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் திரைப்படங்களைத்தயாரித்து வந்தவர் வி.ஏ துரை. இவர் தயாரிப்பில் வெளியான 'பிதாமகன்', ‘கஜேந்திரா' உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. கடைசியாக 2016 ஆம் ஆண்டு வெளியான 'காகித கப்பல்' என்ற படத்தை தயாரித்திருந்தார். மேலும் சில படங்களை விநியோகமும் செய்துள்ளார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="af3ece75-dc9e-4575-88dd-274d9f7eb24f" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300%20%281%29_0.jpg" />

ஆனால், வசூல் ரீதியாக கஜேந்திரா படம் எதிர்பார்த்த அளவு போகாததால் மிகப்பெரிய பண நெருக்கடியை சந்தித்ததாகவும் கடனாளியாக ஆனதாகக் கூறப்படுகிறது. மேலும் புதிய படம் தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகப் பேசப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பத்து வருடத்திற்கு முன்பே அவருடைய மனைவியும், மகளும் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோய் காரணமாக அவதிப்பட்டு வருவதாகவும் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வருவதாகவும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "நீரிழிவு நோயால் அவதிப்பட்டு சிரமப்பட்டுட்டு இருக்கேன். நடக்க முடியல. எனக்கு வேற எந்த வியாதியும் இல்ல. வாழ்வாதாரத்துக்கு ரொம்ப சிரமமா இருக்கு." என உருக்கமாக பேசி அனைவரின் உதவியையும் நாடியுள்ளார்.

இந்த தகவல் அறிந்து சூர்யா ரூ.2 லட்சம் வழங்கியுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தயாரிப்பாளர் சங்க செயலாளர் மன்னன் உதவி செய்ய முன்வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.