Advertisment

“மகாராஜா பட தயாரிப்பாளரே தூக்கமில்லாமல் இருக்கிறார்” - தயாரிப்பாளர் ஏழுமலை

Producer Thirumalai Angry Speech at Dhilraja Press Meet

கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில், ஏ வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் ‘தில் ராஜா’. இப்படம் வருகிற 27 ம் தேதி திரைக்கு வரவுள்ள படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் திருமலை கலந்து கொண்டு பேசுகையில், “சினிமாவிற்கு ஏற்ற ஒரு டைட்டில், ஒவ்வொரு படமும் திரைக்குக் கொண்டு வருவதில் மாபெரும் போராட்டம் இருக்கிறது. விஜய் சத்யா பார்க்க, ஹாலிவுட் ஹீரோ போல் இருக்கிறார். வெங்கடேஷ் சார் பல வெற்றிப்படங்களை உருவாக்கியவர். விஜய் சத்யாவிற்கு அருமையான படம் தந்துள்ளார். ஷெரீன் மிக அழகாக நடித்துள்ளார். இந்த 27 ஆம் தேதி எத்தனை படங்கள் வருகிறது என உங்களுக்குத் தெரியும், கார்த்தி சார் படத்துக்கு இணையாக இந்த போஸ்டர் இருக்கிறது. அம்ரீஷ் நல்ல பாடல்கள் தந்துள்ளார், அவர் நடித்தால் இன்னும் நன்றாக இருப்பார். ஒரு நடிகனாக மட்டுமில்லாமல் இந்தப்படத்தைத் தயாரிப்பாளனாக இன்று வரை சுமந்து கொண்டிருக்கிறார் விஜய் சத்யா. இப்படி ஒரு ஹீரோ இருப்பது தமிழ் சினிமாவுக்கு பெருமை.

Advertisment

தமிழ் சினிமா இப்போது மிக மோசமான நிலையில் இருக்கிறது. மகாராஜா எவ்வளவு பெரிய ஹிட் எனத் தெரியும் ஆனால், அந்தப்பட தயாரிப்பாளர் தூக்கமில்லாமல் இருக்கிறார் அவருக்கு லாபமில்லை. ஷெரீன் இந்தப்படத்திற்கு வந்து கலந்துகொண்டிருக்க வேண்டும். வராமல் இருப்பது கேவலம். பணம் வாங்கித் தானே நடிக்கிறீர்கள். இந்தப்படத்தில் நடித்த இரண்டு நாயகிகள் வரவில்லை, நீங்கள் ஏன் நடிக்க வருகிறீர்கள்? இப்போது தயாரிப்பாளர் சங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இனிமேல் இது நடக்காமல் இருக்கத் தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்கும். இப்படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள் நன்றி.

film producer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe