/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/54_60.jpg)
ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். படத்தின் இசை மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. ட்ரைலரை பார்க்கையில் காட்டு யானைகளால் பாதிக்கப்படும் மலைவாழ் மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிந்தது. இப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் சிறப்பு திரையிடல் நடந்து முடிந்த நிலையில் படம் பார்த்த பிரபலங்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, “அடர்ந்த காட்டுக்குள் ஒரு பறவையாய் நுழைந்துவந்த அனுபவம். நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பர்கள் பலரைப் பார்த்த பரவசம்” என அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு பாராதிராஜ மற்றும் படக்குழுவினருடன்எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/53_54.jpg)
இந்த நிலையில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களைவைத்து படமெடுத்த தயாரிப்பாளர் தாணு இப்படத்தை பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கள்வன், உள்ளம் கவர் கள்வன், பாரதிராஜாவும் , இருவரும் நடிப்பில் மிரட்டுகிறார்கள், க்ளைமாக்ஸ் மிரட்டல், வெற்றி பெற வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
Follow Us