/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/10_76.jpg)
சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். ’சூர்யா 42’ என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கயோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது .
இதனிடையே வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகிறது. அதற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது. இதனிடையே பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் நடித்து வந்த சூர்யா, சில காரணங்களால் படத்தில் இருந்து விலகினார்.
இதனைத்தொடர்ந்து 'வணங்கான்' படத்தைப் போலவே 'வாடிவாசல்' படத்தில் இருந்தும் சூர்யா விலக முடிவெடுத்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியானது. மேலும் 'வாடிவாசல்' படமே கைவிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் 'வாடிவாசல்' படத்தின் தயாரிப்பாளர் தாணு, இது குறித்து ஒரு ஆங்கில ஊடகத்தில் பேசியுள்ளார். அவர் பேசுகையில், "சூர்யா வாடிவாசல் படத்தில் இருந்து விலகவில்லை. அவை வெறும் வதந்திதான். யாரும் அதனை நம்ப வேண்டாம். படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் மாதங்களில் அப்டேட்டுகள் வெளியாகும்" எனத்தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)