Advertisment

"நானே எதிர்பார்க்காத தடங்கல் "- மாநாடு படம் குறித்து மீண்டும் ட்வீட் செய்த சுரேஷ் காமாட்சி

producer suresh kamatchi tweet about maanaadu movie

Advertisment

இயக்குநர்வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்த நிலையில், சில பிரச்சனைகளால் படத்தின் ரிலீஸ் நவம்பர் 25ஆம்தேதிக்குத்தள்ளி வைக்கப்பட்டது.

இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர்சுரேஷ் காமாட்சி, 'மாநாடு’ படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக நேற்று (24.11.2021) அறிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றமடைந்தனர். இதனைத்தொடர்ந்து படத்தின் அனைத்து பிரச்சனைகளும்சரிசெய்து, திட்டமிட்டபடி ‘மாநாடு’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="575e8277-732f-4e06-b2f8-f88920bcb165" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_51.jpg" />

Advertisment

இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படம் தொடர்பாக மீண்டும் ட்வீட்செய்துள்ளார். அதில், "நானே எதிர்பார்க்காத தடங்கல் மாநாடு படத்தின் இந்த தாமதம். நேற்று இரவு முழுக்க நிறைய நலம் விரும்பிகள் அழைத்தும் குறுந்தகவலிலும் தைரியமூட்டினர். நிறைய பேரின் அழைப்பை எடுக்க இயலவில்லை. அரசியல் பிரமுகர்கள் , சினிமா பிரபலங்கள், பத்திரிகை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

actor simbu suresh kamatchi maanaadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe