கரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகிற மே 3- ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இதனிடையே ஜோதிகா ஒரு தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

Advertisment

sr prabhu

'ராட்சசி' படத்திற்காக விருது பெற்ற ஜோதிகா மேடையில், கோவில்களின் பராமறிப்பிற்காகப் பல உதவிகளைச் செய்கிறோம் அதைப்போலவே மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான மருத்துவத்திற்கும், கல்விக்கும் உதவிகள் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Advertisment

தற்போது இந்தப் பேச்சு மிகவும் சர்ச்சையாகி வைரலாகி வருகிறது. ஜோதிகாவின் இந்தப் பேச்சிற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தயாரிப்பாளரும் நடிகர் சூர்யாவின் உறவினருமான எஸ்.ஆர். பிரபு ட்விட்டரில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில், “ராட்சசி படத்தில் பேசிய வசனத்தின் பொருளை நேரில் உணர்ந்த ஜோதிகா அண்ணி, அப்படத்திற்காக விருது வழங்கப்பட்ட பொழுது பேசியது அரைகுறை அர்த்தம் கண்டு அநாகரீகமாகச் சில அன்பர்களால் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. நல்ல கருத்தை நாடறியச் செய்வதே உங்கள் வெறுப்பு அரசியலின் சாதனை.வேறென்ன சொல்ல” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment