Advertisment

அஜித் படத் தயாரிப்பாளர் கைது

producer sivasakthi pandian arrest for check fraud case

Advertisment

தமிழில் காதல் கோட்டை, கண்ணெதிரே தோன்றினாள், வெற்றிக் கொடி கட்டு உள்பட பல படங்களைத்தயாரித்தவர் சிவசக்தி பாண்டியன். இவர் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து தயாரித்த படத்திற்காகப் பிரபல நிறுவனத்தில் 1 கோடியே 70 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்கவில்லை என அந்த பிரபல நிறுவனம் குற்றம் சாட்டியது.

மேலும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிவசக்தி பாண்டியன் மீது காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், பணத்தை திருப்பித்தர பல தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் பணம் கொடுக்க சிவசக்தி பாண்டியன் முன்வராததால் அவரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி நுங்கம்பாக்கம் போலீசார் சிவசக்தி பாண்டியனை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர். பின்பு அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இது திரையுலகில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

arrest film producer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe