Advertisment

சம்பளத்தில் 40% குறைத்த உதயாவிற்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர்!

bdgd

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் பல துறைகள் முடங்கியிருப்பதைப் போல சினிமா துறையும் முடங்கியுள்ளது. இதனால் திரையுலகில் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதைச் சரி செய்யும் வகையில் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் உதயா ஆகியோர் தாங்களாக முன்வந்து சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் தனது சம்பளத்தில் 40% குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ள நடிகர் உதயாவிற்கு அக்னி நட்சத்திரம் பட தயாரிப்பாளர் மணிகண்டன் சிவதாஸ் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...

Advertisment

''மே 8, 2020

அன்புள்ள திரு உதயா,

உங்கள் சிந்தனைக்கு நன்றி. உங்கள் சம்பளத்தை 40% வரை குறைக்கும் உங்கள் சரியான நேர நடவடிக்கைக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். தயாரிப்பாளரின் நலனில் அக்கறை கொண்டு துறையின் நெருக்கடிகளை முன்கூட்டியே அறிந்து, அதற்கு தகுந்தாற்போல் வேலை செய்யும் திறன் உங்களுக்கு உள்ளது. எங்கள் திட்டத்திற்கு நீங்கள் காட்டிய இரக்கம் முழுத் தொழிலுக்கும் ஒரு உத்வேகம். தொற்றுநோய்களின் இந்த கடினமான சூழ்நிலையையும், முதலீட்டாளரின் பார்வையில் தொழில்துறையின் வீழ்ச்சியையும் நீங்கள் எவ்வாறு எதிர்நோக்குகிறீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

சிறு தயாரிப்பாளர்களின் வாழ்க்கையிலும், மற்றும் தொழில்துறையிலும் இதுபோன்ற மாற்றத்தை ஏற்படுத்தும் உங்கள் தன்னார்வ நடவடிக்கைக்கு மீண்டும் நன்றி.

அன்புடன்.

மணிகண்டன் சிவதாஸ்

திரைப்பட தயாரிப்பாளர்

(அக்னி நட்சத்திரம்)'' என குறிப்பிட்டுள்ளார்.

Actor udhaya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe