theatre

Advertisment

தென் இந்தியா முழுவழுதும் உள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பட உலகில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 1ஆம் தேதி முதல் புதிய படங்களை திரைக்கு கொண்டு வருவதை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த சிறிய மற்றும் பெரிய பட்ஜெட்டில் தயாரான 20 படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. மேலும் 16-ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் நடக்காது என்றும், மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வேலை நிறுத்தத்தை குறித்து சில பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

jsk

இது குறித்து தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் பேசுகையில்...

"ரஜினி, கமல் இருவரும் அரசியலில் குதித்தே விட்டார்கள்.. இதில் ஒருவர் அரசியல் சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார்.. இன்னொருவர் இமயமலைக்கு சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார். ஆனால் அவர்களை இந்த நிலைக்கு உயர்த்திய சினிமா துறையோ, சரிவிலிருந்து தன்னை மீட்கும் விதமாக கடந்த மார்ச்-1ஆம் தேதி முதல் போராட்டத்தில் குதித்துள்ளது. சினிமாவின் ஆதார சுருதியாக, அச்சாணியாக இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னெடுத்து நடத்தும் இந்த போராட்டத்தை, யாருக்கோ எவருக்கோ நடத்துகிறார்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் யாரும் இதற்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை.. எனவே இந்த திரைப்பட துறையின் இன்னல்களை கலைய ஏதேனும் செய்துவிட்டு, அதன்பின் உங்கள் அரசியல் பயணத்தை துவக்குங்கள்.. அதன் பின் அரசியலில் உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம்” என்றார்.

Advertisment

ari

இயக்குனர் அறிவழகன் தனது சமூக வலைதள பக்கத்தில்...

"தற்போது நடக்கும் வேலை நிறுத்தத்திற்கு உகந்த மாதமாக மார்ச் மாதம் திகழ்கிறது. எப்படியிருந்தாலும் இது ஏப்ரல் மாதத்தில் முடிந்துவிடும். அதன் பின் பெரிய படங்கள் சொன்ன தேதியில் தங்கு தடையின்றி வெளிவந்து விடும். ஆனால் சிறு பட்ஜெட் படங்கள் அதன் பின் ரிலீஸ் ஆவதே மிகவும் கடினமாக மாறிவிடும் என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது" என்றார்.