தமிழில் மாசாணி, ஜாக்சன் துரை, சலீம், செவென் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் சரவணன். ஸ்ரீ க்ரீன் புரொடக்‌ஷ்னஸ் பேனரில் படங்களை தயாரித்த அவர் இப்போது ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘அடங்காதே’ படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இப்படம் உருவாகி பல ஆண்டுகள் ஆகியும் சில காரணங்களால் வெளியாகாமல் இருந்த இந்நிலையில் ஆகஸ்ட் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

Advertisment

தயாரிப்பைத் தாண்டி விநியோகத்திலும் ஈடுபட்டிருக்கிறார். பைரவா, புலி, போகன் உள்ளிட்ட சில படங்களை விநியோகமும் செய்துள்ளார். இந்த நிலையில் சரவணன் செக் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 2017ஆம் ஆண்டு திருவள்ளுவர், பூவிருந்தவல்லி பகுதியை சேர்ந்த கண்ணப்பன் என்பவரிடம் ரூ.1.03 கோடி பணம் பெற்றுள்ளார். 

Advertisment

பின்பு காசோலையாகக் கொடுத்த போது அது பணமில்லாமல் திரும்பி வந்துள்ளது. இதனால் கண்ணப்பன் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.