/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/2_149.jpg)
இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. இதையடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் உட்பட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை எடுத்துவந்த தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சேலம் சந்திரசேகரன் சிகிச்சை பலனின்றி காலமானார். இவர், சூர்யா நடித்த ‘கஜினி’, தனுஷ் நடித்த ‘சுள்ளான்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ளார். பல படங்களை விநியோகம் செய்துள்ள இவர், பிரபல விநியோகஸ்தராகவும் சினிமா வட்டாரத்தில் அறியப்பட்டுவந்தார். இதனையடுத்து, சேலம் சந்திரசேகரன் மறைவிற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
கே.வி. ஆனந்த்,தாமிரா, நடிகர் பாண்டு, ஜோக்கர் துளசி, சேலம் சந்திரசேகரன் என திரைத்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்களின் தொடர் மரணங்கள் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)