producer Ravindhar Chandrasekaran married serial actress mahalakshmi

Advertisment

'முருங்கைக்காய் சிப்ஸ்', 'சுட்ட கதை', 'நட்புனா என்னனு தெரியுமா' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். அதோடு சில படங்களை விநியோகமும் செய்திருக்கிறார். சமூக வலைத்தளத்தில் ஒன்றான யூ-ட்யூப்பில் பல சேனல்களில் நேர்காணல் மூலம் தன் கருத்துக்களை பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இந்நிலையில் ரவீந்தர் சந்திரசேகரன் பிரபல சின்னத்திரை நடிகையும், தொகுப்பாளருமான மகாலட்சுமியை இன்று காலை திருமணம் செய்துகொண்டார். திருப்பதியில் நடந்த இந்த திருமணத்தில் இருவீட்டார் குடும்பங்களைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்பு ரவீந்தர் சந்திரசேகரன் திருமண புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, "மஹாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடச்சா வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்லுவாங்க... ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையா கிடச்சா..." என குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் மகாலட்சுமி தனது சமூக வலைதள பக்கத்தில், "என் வாழ்க்கையில் நீங்கள் இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம். உங்கள் காதலால் என் வாழ்க்கையை அழகாக்கிவிட்டடீர்கள்" என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே மகாலட்சுமி ஏற்கனவே திருமணமாகி பின்பு கணவரை பிரிந்துவாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.