Producer Ravinder Chandrasekhar talked about his marriage

'முருங்கைக்காய் சிப்ஸ்', 'சுட்ட கதை', 'நட்புனா என்னனு தெரியுமா' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தரவீந்தர் சந்திரசேகரன் பிரபல சின்னத்திரை நடிகையும், தொகுப்பாளருமான மகாலட்சுமியை அண்மையில் திருமணம் செய்துகொண்டார். இவர்களின்திருமணம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்திற்கு உள்ளானது.

Advertisment

இந்நிலையில் இது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், "என்னோட திருமணம் நாட்டுக்கு முக்கியமானது கிடையாது. ஆனால் எங்கள்திருமண விஷயம் தொடர்ந்து வைரலானது. உருவத்தை வைத்து ஒரு விஷயம் இவ்வளவுபெரிதாகபேசப்பட்டது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற உச்ச நட்சத்திரங்களின் திருமணத்தை ஓடிடியில் விற்றால் கூட பார்க்க முடியாத அளவு பணத்தை எங்கள் திருமணத்தின் மூலம் இணையம் உருவக்கேலியைவைத்து சம்பாதித்தது ரொம்ப வித்தியாசமாக இருந்தது" என்று கூறியுள்ளார்.

Advertisment