Advertisment

மேடை மற்றும் இசை கலைஞர்களுக்கு விஜய் பட தயாரிப்பாளர் உதவி!

pt selvakumar

Advertisment

கரோனா வைரஸ் உலகத்தையே அசச்சுறுத்தி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தயாரிப்பாளர் PT செல்வகுமார் தொடர்ந்து 65 நாட்களாக உதவி செய்து வருகிறார்.

அந்த வகையில் இன்று குமரி மாவட்டத்தை சேர்ந்த மேடை கலைஞர்கள், இசை கலைஞர்கள், சமையல் தொழிலாளர்கள், பந்தல் செட் அமைப்பவர்கள், தையல் தொழிலாளர்கள் 108 பேருக்கு அரிசி மூட்டைகள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. இதில் அதிமுக டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு. தளவாய் சுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியை தொடர்ந்து தயாரிப்பாளர் PT செல்வகுமார் பேசுகையில், “மதம், இனம், ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு கலப்பை மக்கள் இயக்கம் சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக குமரி மண்ணில் சமத்துவ பொங்கல், 58 பசுக்களுடன் கோ பூஜை போன்றவற்றை நடத்தினோம். தற்போது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்த கலைஞர்களுக்கு தளவாய் சுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு வழங்கியது அனைவருக்கும் உற்சாகம் தருகிறது. குமரி மக்களின் குரலாக டெல்லியில் ஒலித்துக்கொண்டிருக்கிறார். நாங்கள் இந்த நிகழ்வுக்கு அழைத்ததும் உடனடியாக எப்போது வரவேண்டும் என்று பெருந்தன்மையோடு கேட்டார். அவர் இதை போன்று பண்போடும்,அதிகாரத்தோடும், நீண்ட ஆயுளோடு இருக்க இறைவனை வேண்டுகிறோம்” என்றார். பின்னர் மக்கள் அனைவருக்கும் சத்து மாத்திரை வழங்கப்பட்டது.

pt selvakumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe