Advertisment

அஜித் பட தயாரிப்பாளர் மறைவு - திரையுலகினர் அஞ்சலி

producer mohan natarajan passed away

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்தவர் மோகன் நடராஜன்(71). இவர் தயாரிப்பாளராக முதலில் நதியா மற்றும் சுரேஷ் ஆகியோரது நடிப்பில் கடந்த 1986ஆம் ஆண்டு வெளியான ‘பூக்களை பறிக்காதீர்கள்’ என்ற படத்தை வி.சண்முகம் என்பவருடன் இணைந்து தயாரித்திருந்தார். அதன் பிறகு இருவரும் இணைந்து பிரபுவின் ‘பிள்ளைக்காக’, ‘என் தங்கச்சி படிச்சவ’, ‘மறவன்’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தனர்.

Advertisment

அதையடுத்து ஸ்ரீ ராஜகாளியம்மன் சூப்பர் ஃபிலிம்ஸ் என்ற தலைப்பில் அஜித்தின் ‘ஆழ்வார்’, சூர்யாவின் வேல் உள்ளிட்ட பல படங்களை தனியாக தயாரித்திருக்கிறார். நடிகராக மோகன் நடராஜன், விஜயகாந்தின் பதவிப்பிரமாணம், கமலின் ‘மகாநதி’, சரத் குமாரின் ‘அரண்மனை காவலன்’, அஜித்தின் சிட்டிசன் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் மோகன் நடராஜன் சமீபகாலமாக உடல் நலைக்குறைவால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததையடுத்து அவர் காலமானார். இன்று மதியம் அவரது இறுதி சடங்கு திருவொற்றியூரில் நடைபெறும் நிலையில், சூர்யா, இயக்குநர் பி.வாசு உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

passed away film producer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe