/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/69_50.jpg)
சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமதி அலி என்பவர் திரைப்படத்தயாரிப்பாளராக இருந்து வந்துள்ளார். தனது தயாரிப்பு நிறுவன அலுவலகத்தை திருவேற்காடு கீழ் அயனம்பாக்கத்தில் நடத்தி வந்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு பெண்ணை வேலைக்கு சேர்த்துள்ளார். அந்த பெண் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் முகமது அலி மீது கடந்த மாதம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், முகமது அலி தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து தன்னை காதலிப்பதாக கூறி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தொல்லை கொடுத்தார்.
மேலும், குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து, தன்னிடம் தவறாக நடந்துகொண்டு அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார். பின்பு கர்ப்பமடைந்த என்னிடம், சத்து மாத்திரைகள் என கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கருவினை கலைத்துள்ளார். அதோடு கருக்கலைப்பு செய்ததை வெளியே சொன்னால், கொலை செய்து விடுவேன் என்றும், தன்னிடம் தவறாக நடந்துகொண்ட போது பதிவு செய்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்றும் மிரட்டி தன்னிடம் ரூ. 5 லட்சம் வரை பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.
இது புகாரை பெற்றுக் கொண்ட அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள், புகார் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அந்த பெண் முன்வைத்த குற்றச்சாட்டுகள்
அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் காவல் துறையினர், தயாரிப்பாளர் முகமது அலி மீது
4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)