
எக்ஸெட்ரா என்டர்டெயின்மெண்ட் நிறுவன படத் தயாரிப்பாளர் மதியழகன் 'பாக்ஸர்' என்னும் படத்தில் வில்லனாக நடிக்கின்றார் என்று அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அருண்விஜய் ஹீரோவாக நடிக்கும் அந்த 'பாக்ஸர்' படத்தில் வில்லனாக நடிப்பதற்காக 'பாக்ஸர்' போன்றே உடம்பை மாற்றியிருக்கிறார்.
தற்போது, 'சவரக்கத்தி' படத்தில் இயக்குனராக அறிமுகமான ஆதித்யாவின் 'பிதா' படத்தில் எதிர்மறை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் மதியழகன்.
மிஷ்கின், ஸ்ரீ கிரீன் சரவணன், மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்ரேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் 'பிதா' படம், ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவை மையமாகக் கொண்டு உருவாகும் த்ரில்லர் வகைப்படமாகும். காணாமல் போன தன் மகளை எப்பாடு பட்டேனும் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீவிரமாகத் தேடும் ஒரு தந்தையின் வலியைப் பதிவு செய்யும் படமாக இது உருவாவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
நேற்று காலை இப்படத்திற்கான துவக்க விழா பூஜை நடைபெற்றது. 'பிதா' படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கு கொண்டனர். மதியழகனைத் தவிர கலையரசன், ஆர்.ஜே.ரமேஷ் திலக், அனு கீர்த்தி வாஸ், ராதா ரவி ஆகியோருடன் வேறு சில முக்கிய நடிகர்களும் நடிக்கவிருக்கின்றனர். 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பிரசன்ன குமார் 'பிதா' படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)