பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எம் முத்துராமன்(83) காலமானார். இவர்சிவாஜி நடிப்பில் வெளியான ராஜமரியாதை, ரஜினி நடிப்பில் வெளியான ஆயிரம் ஜென்மங்கள், பிரபு நடிப்பில் வெளியான மூடு மந்திரம், எடுப்பார் கைப்பிள்ளை, உங்க வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின்படங்களை தயாரித்துள்ளார். இவர்தயாரிப்பில் வெளியான ஒரு வீடு ஒரு உலகம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடுதமிழக அரசின் சிறந்த படத்திற்கான மாநில விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் உடல்நலக்குறைவுகாரணமாக தயாரிப்பாளர் எம்.முத்துராமன்(83) இன்று காலை உயிரிழந்தார். இவரின்மறைவுக்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள் எனபலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.