/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Lalith about LEO.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்'லியோ' படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தினை லலித் தயாரிக்கிறார்.
சென்னையில் நடந்த விழா ஒன்றில் தயாரிப்பாளர் லலித், லியோ படத்தின் அப்டேட் குறித்த தகவலை வெளியிட்டார். அதில் “லியோ படத்தின் ஃபர்ஸ்ட் ஆஃப் பார்த்துட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ்கிட்ட சொன்னேன். எடிட்டர் பிலோமின் சூப்பரா பண்ணிட்டாரு என்று. அதற்கு லோகேஷ் சொன்னாரு நான்தான் சார் டைரக்ட் பண்ணினேன். நீங்க எடிட்டர் பிலோமினை சொல்றிங்க என்று கேட்டார். நான் பிலோமின் கிட்ட சொன்னேன், உன்னையப் பற்றி பேசுனா இயக்குநர் கோவப்படுறாருன்னு சொன்னேன் என்று கலகலப்பான ஒரு விசயத்தை பகிர்ந்தார்.
பிறகு பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர் “சென்னையில் தான் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்ததிட்டமிட்டுள்ளோம். அடுத்த வாரம் அது குறித்த தகவலைஅறிவிப்போம். நடிகர் விஜய் இன்னும் படம் பார்க்கவில்லை. அனைத்து தர ரசிகர்களுக்கும் விருப்பமான படமாய்அமையும் விதமாக தயாராகி இருக்கிறது” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)