k rajan

Advertisment

ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மஹா’. ஹன்சிகாவின் 50ஆவது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 22ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் மானஸ்வி பேசுகையில், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு தன்னுடைய இருக்கையில் அமர முயன்றார். அப்போது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தயாரிப்பாளார் கே.ராஜன் மானஸ்வியை அழைத்து, “எல்லோருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு தயாரிப்பாளர் மதியழகனுக்கு நன்றி சொல்லலயே, இப்பவே தயாரிப்பாளரை கைவிட்டா எப்படி” எனக் கிண்டலாக தெரிவிக்க அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. இதையடுத்து, மானஸ்வி தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்தார்.