Advertisment

“அப்ப கமல், இப்ப தனுஷ்... சினிமாவ கெடுக்குறானுக!” - தயாரிப்பாளர் சர்ச்சை பேச்சு

சமீபத்தில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சில் ஒன்றில் தயாரிப்பாளர் கே.ராஜன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், செல்வராகவன், கௌதம் மேனன், கமல்ஹாசன், தனுஷ் உள்ளிட்டோரை விமர்சித்தார்.

Advertisment

k rajan

அதில், “ஆந்திர பிரதேசத்தில் தயாரிப்பாளர் சங்கம் செம பவர்ஃபுல், அங்க நடிகனும் ஆட்ட முடியாது, இயக்குனரும் ஆட்ட முடியாது. இங்கதான் நடிகனும், இயக்குனரும் ஆட்டி ஆட்டி தயாரிப்பாளரை குளோஸ் செய்கிறார்கள்.

Advertisment

செல்வராகவன், பல தயாரிப்பாளர்களை காலி செய்திருக்கிறார். ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்திருக்கிங்களா? அந்த தயாரிப்பாளர் காலி. பல குடும்பத்தை அழித்தவர்கள் எல்லாம் இயக்குனர்களாக இருக்கிறார்கள். பல இயக்குனர்கள் திட்டம்போட்டு, சில குடும்பங்களை அழித்தார்கள். நான் அனைத்து இயக்குனர்களையும் சொல்லவில்லை. ஏன் என்றால் ஒரு இயக்குனர் என்பவர் நம்பள நம்பி பணம் போடுகிற தயாரிப்பாளர் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்க வேண்டும். ஆனால், இப்போ வருகிற இயக்குனர்கள் ஹீரோ நல்லா இருக்கணும், ஹீரோயின் நல்லா இருக்கணும்னு நினைக்கிறார்கள். தயாரிப்பாளரிடம் இருந்து அனைத்து செலவிடையும் அவர்களுக்காக கொட்டுகிறார்கள் இந்த இயக்குனர்கள் அப்போதுதான் அடுத்த படம் அவர்களுக்காக பட வாய்ப்பு கொடுப்பார்களாம். அனைத்து இயக்குனருக்கும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன், எந்த நடிகனும் படத்திற்கும் பணம் கொடுக்கமாட்டார். என்னுடைய தயாரிப்பாளர்தான் பணம் கொடுப்பார்.

இந்த சின்னப்படம் வெற்றி பெற்றால், இதை பார்த்து பத்து புது தயாரிப்பாளர்கள் வருவார்கள். மக்களுக்கு நல்ல படங்களை கொடுக்க வேண்டும், தரமான படங்களை கொடுக்க வேண்டும், அநாகரீகமான படங்களை கொடுக்கக்கூடாது. தொட்டுவிடும் தூரம்(எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் தலைப்பை தவறாக சொன்னார்), அந்த படத்தின் முதல் பாதிக்கு மேல் உட்கார முடியவில்லை. ஹீரோயினை மடியிலேயே வைத்துக்கொண்டு, முத்தமாக கொடுக்கிறார் ஹீரோ. படத்தில் வசனம் கம்மி, முத்தம்தான் அதிகம்.

கமல்ஹாசன்னு ஒருவர், அவருக்கு அடுத்து தனுஷ்என்ற ஒருத்தர். இந்த இரண்டு பேரும் சினிமாவை கெடுக்கின்றனர். ஒரு நாகரிகமே இல்லாமல், நமக்கு என்று குடும்ப இருக்கு, அக்கா இருக்கு, அம்மா இருக்காங்க இவர்களெல்லாம் நம் படத்தை பார்க்க வேண்டாமா என்ற யோசனை இல்லாமல் அநாகரீகமாக படம் எடுக்கிறார்கள். கேவலமாக இல்லை. அந்த அசுரன் படத்தில் எதாவது ஒரு விரசம் இருந்ததாங்க. மக்கள் அதை பார்க்கவில்லையா, நாம் அனைவரும் அதை ரசித்து பார்த்தோமே, அது பெரிய ஹிட் கொடுத்ததே. அதே மாதிரி கைதி படத்தில் ஒரு வல்காரிட்டி இருந்ததாங்க, ஆனால் படம் சூப்பர். அசுரன் மற்றும் கைதி இரண்டு படங்களின் வசூலும் சூப்பரான வசூல். நல்ல படங்களை எடுங்க, நல்ல சம்பாதிங்க அதைவிட்டுட்டு இது என்னங்க அக்கரமம். இடைவேளை வரை இந்த படத்தில் நூறு வார்த்தைகள்தான் பேசியிருப்பார்கள். ஆனால், நூற்றைம்பது முத்தமாவது கொடுத்திருப்பார்கள். இரண்டாம் பாதியில் ஹீரோயினை கொண்டுபோய் பெற்றோரின் வீட்டில் விட்டுவிட்டு, அங்கபோய் அவர்கள் முன்பேவும் முத்தம் கொடுத்துக்கொள்கிறார்கள்” என்று கூறினார்.

kamalhassan DHANUSH k rajan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe