Advertisment

மர்மமான முறையில் தயாரிப்பாளர் மறைவு

producer Kedar Selagamsetty passed away

Advertisment

தெலுங்கில் திரைப்படத் தயாரிப்பாளராக வலம் வருபவர் கேதார் சேலகம்செட்டி. இவர் தனது பால்கன் கிரியேஷன்ஸ் பேனரின் சார்பாக விஜய் தேவரக்கொண்டாவின் தம்பியான ஆனந்த் தேவரக்கொண்டா நடித்த ‘கம் கம் கணேஷா’ படத்தை தயாரித்தார். மேலும் விஜய் தேவரக்கொண்டா மற்றும் புஷ்பா இயக்குநர் சுகுமார் கூட்டணியில் பெரிய பட்ஜெட்டில் ஒரு படம் உருவாக்கவுள்ளதாக அறிவித்தார். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.

இவர் தெலுங்கு திரைப் பிரபலங்களான அல்லு அர்ஜூன், விஜய் தேவரக்கொண்டா மற்றும் தயாரிப்பாளர் பன்னி வாஸ் ஆகியோருக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். இந்த நிலையில் துபாயில் கேதார் சேலகம்செட்டி மரணம் அடைந்துள்ளார். இவரது மறைவு குறித்தான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால் அவரது மரணத்தில் மர்மம் நீடித்து வருகிறது.

இவரது திடீர் மறைவு தெலுங்கு திரையுலக வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையொட்டி பல்வேறு திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

passed away film producer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe