கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ், தற்போது செல்வராகவன் இயக்கத்தில்உருவாகிவரும்‘நானே வருவேன்’ படத்தில் நடித்துவருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில், கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவந்தது.இதனிடையே, தனுஷ் ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்திலும், செல்வராகவன் ‘சாணிக்காயிதம்’ படத்திலும் நடித்துவந்ததால், ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு படங்களின்பணிகளை முடித்துள்ளதால், தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் ‘நானே வருவேன்’ படத்தில்கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்புமீண்டும் தொடங்கியுள்ளது. இத்தகவலை தனதுட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, 'அசுரன்', 'கர்ணன்' வரிசையில் 'நானே வருவேன்', நீங்கள் கொண்டாடும் வகையில் திரையரங்கில்... தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் பிரம்மாண்டபடைப்பு, விரைவில் வெள்ளித்திரையில்.." எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அசுரன், கர்ணன் வரிசையில் #NaaneVaruven நீங்கள் கொண்டாடும் வகையில் திரையரங்கில்...@dhanushkraja நடிப்பில் @selvaraghavan இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பு, விரைவில் வெள்ளித்திரையில்..@thisisysr@omdop@dhilipactionpic.twitter.com/RK75mncYb3
— Kalaippuli S Thanu (@theVcreations) February 14, 2022