Advertisment

ரசிகர்களை வைத்து மிரட்டுகிறார்கள்; கமல் ஆள் ரெடி செய்து அனுப்பினார் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்

producer k rajan talk about kamalhassan

காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரித்திருக்கும் படம் ‘அட்ரஸ்’. குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இராஜமோகன் இயக்கும் இப்படத்தில் அதர்வா கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இசக்கி பரத், புதுமுகம் தியா, ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கியகதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கே. ராஜன் கலந்துகொண்டார்.

Advertisment

இவ்விழாவில் அவர் கலந்துகொண்டு பேசியதாவது: "‘அட்ரஸ்’ பாடல் நன்றாக இருக்கிறது, ட்ரெய்லர் நன்றாக இருக்கிறது என்று பார்த்தவர்கள் சொன்னார்கள். என்னுடைய கருத்து என்னவென்றால் என் தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்க வேண்டும். பின் டெக்னிஷியன், நடிகர்கள் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் எல்லாம் தலைகீழாக இருக்கிறது. தமிழ்மணி எவ்வளவு பெரிய தயாரிப்பாளர். ஆனால் அவர் படம் செய்து பல காலம் ஆகிவிட்டது. கொரோனாவிற்கு பிறகு திரையரங்கு நன்றாக இருக்கிறது மக்கள் கூட்டமாக வருகிறார்கள். சினிமாவில் தயாரிப்பாளர்கள் சரியில்லை. பின்னால் இழுப்பதில் குறியாக இருக்கிறார்கள். தமிழ் சினிமா தற்போது நன்றாக இருக்கிறது. தமிழ் சினிமா பற்றியும் நடிகர் யாரைப் பற்றியும் பேசவில்லை. பேசினால் பிரச்சனை வருகிறது. ரசிகனை வைத்து மிரட்டுகிறார்கள். ரசிகனை வைத்து மிரட்டினால் அவ்வளவுதான். கமல் ரசிகர்கள் மிரட்டியபோது அவர்களை ஜெயிலுக்கு அனுப்பினேன். ஆனால் கடைசியில் அவர்களை நான்தான் பெயில் எடுத்தேன். ஒவ்வொருவரும் ஏழைகள். அவர்களை தூண்டி விட்டவர் வரவில்லை. கமல் என்னை திட்ட ஆள் ரெடி செய்து அனுப்பிவிட்டு அவர்களை கண்டுகொள்ளவில்லை. அவர்கள் உலக நாயகனால் உள்ளே போனார்கள். அந்த கேஸ் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. சினிமா நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.

Advertisment

தர்மம் செய்யுங்கள். கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் தம்பி இறந்து விட்டார் அவரின் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் போயிருக்கிறார்கள். அதுதான் அவர் சேர்த்த சொத்து. அவர் அப்பா ஆதரவற்றவர்களுக்கு ஒரு பள்ளி ஆரம்பித்துள்ளார் ஆனால் இந்த தம்பி அதை தொடர்ந்து நடத்தியுள்ளார். அதுமட்டுமல்ல அந்த தம்பி தான் இல்லையென்றால் யார் நடத்துவார்கள் என 8 கோடி ரூபாய் பேங்கில் போட்டு வைத்து, தான் இல்லாவிட்டாலும் இது தொடர்ந்து நடக்க வேண்டும் என ஏற்பாடு செய்துள்ளார். அது தான் புண்ணியம். இங்கு யார் செய்கிறார்கள்" எனக் கூறியுள்ளார்.

adharva k rajan Kamalhasaan kamalhaasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe