Advertisment

"வேறு வகையில் வருவாய் ஈட்டிக் கொள்ளுங்கள்" - முதல்வருக்கு கோரிக்கை வைத்த கே.ராஜன்

producer k rajan speech at pambattam trailer launch

‘ஓரம்போ’, ‘வாத்தியார்’, ‘6.2’ போன்ற படங்களைத்தயாரித்த ‘வைத்தியநாதன் பிலிம் கார்டன்’ பட நிறுவனம் சார்பில், வி. பழனிவேல் தமிழ்,தெலுங்கு,இந்தி மொழிகளில் பிரமாண்டமாகத்தயாரித்துள்ள படம் ‘பாம்பாட்டம்.’ வி.சி. வடிவுடையான் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக ஜீவன், கதாநாயகிகளாக மல்லிகா ஷெராவத், சாய் ப்ரியா, ரித்திகா சென் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.

Advertisment

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் ஆர்யா டிரைலரை வெளியிட்டார். அப்போது பலரும் படத்தில் பணியாற்றிய தங்களது அனுபவங்களைப் பற்றிப் பேசினர். நடிகர் ஜீவன் பேசுகையில், "இந்தக் கதை புதிய கோணத்தில் இருக்கும். இது நான் நடிக்கும் முதல் பீரியட் படம். இயக்குநர் வடிவுடையானின் உருவத்துக்கும் அவருடைய நடவடிக்கைக்கும் சம்பந்தமே இருக்காது. ’பாம்பாட்டம்’ யாராலும் தீர்மானிக்க முடியாத படமாக வெளிவரும்” என்றார்.

Advertisment

தயாரிப்பாளரும் வினியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன் பேசுகையில், "இப்படத்தை அற்புதமாக எடுத்திருக்கிறார்கள். நடிகர், நடிகைகள் படத்தின் புரமோஷனுக்கு வரவேண்டும். 50 கோடி, 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களால் சினிமா நல்லா இருக்கும் என்று அர்த்தம் இல்லை. தயாரிப்பாளர்களுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் லாபம் கிடைத்தால்தான் சினிமா நல்லா இருக்கும். இன்றைக்குத்தமிழ்நாட்டில் குடியால் லட்சக்கணக்கான குடும்பங்கள் கெட்டு குட்டிச்சுவராய் போய்விட்டது. நான் தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன். குடலையும் குடும்பத்தையும் கெடுக்கும் மது வேண்டாம். அரசாங்கத்திற்கு வேறு வகையில் வருவாய் ஈட்டிக் கொள்ளுங்கள்." என்றார்.

k rajan jeevan paambattam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe