தயாரிப்பாளர் கே.ராஜன் திருமாவளவனுடன் திடீர் சந்திப்பு

producer k rajan meet thirumavalavan mp

90-களில் தமிழ் சினிமாவில் தயாரிப்பு, இயக்கம், கதாசிரியர் போன்ற துறைகளில் பயணித்தவர் தயாரிப்பாளர் கே.ராஜன். இது போக சில படங்களில் நடித்தும் உள்ளார். கடைசியாக பாபி சிம்ஹா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'பாம்பு சட்டை' படத்தில் 'ஷண்முகம்' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்போது பல திரைப்பட நிகழ்ச்சிகளில் அழைப்பாளராகக் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் பல திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசியும்வருகிறார். நிறைய மேடைகளில் இவர் பேசிய பேச்சு விவாதப் பொருளாக மாறியுள்ளது. மேலும் பல விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.

இந்நிலையில், தயாரிப்பாளர் கே.ராஜன்விடுதலைசிறுத்தைகளின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமானதொல். திருமாவளவனை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஒரு அன்பின் வெளிப்பாடு எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "திரைப்படத் தயாரிப்பாளர்,நடிகர் கே.ராஜன் அன்பின் வெளிப்பாடாய் கட்சியின் தலைமையகம், அம்பேத்கர் திடலுக்கு திடீரென வருகை தந்து பெரு மகிழ்வளித்தார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

k rajan Thirumavalavan
இதையும் படியுங்கள்
Subscribe