Advertisment

பழம்பெரும் தயாரிப்பாளர் காலமானார்!

raghunathan

Advertisment

நடிகர் கமல்ஹாசனை சோலோ ஹீரோவாக முதன் முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் காலமானார்.

'களத்தூர் கண்ணம்மா'வைத் தொடர்ந்து கமல்ஹாசன் சில படங்களில் துணை நடிகராகவும், நடன கலைஞராகவும் பணிபுரிந்தார். 1975ஆம் ஆண்டு 'பட்டாம்பூச்சி' என்னும் படத்தில்தான் கமல்ஹாசன் சோலோ ஹீரோவாக அறிமுகமானார்.

கே. ரகுநாதன்(வயது 79) தனது ஆர்.ஆர்.மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கமல்ஹாசனை அறிமுகப்படுத்தியவர். வயது மூப்பின் காரணமாக நேற்று காலமானார். அவருடைய இறுதிச்சடங்கு கே.கே. நகரிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெறுகிறது.

Advertisment

ரகுநாதன் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் ஐந்து படங்களை இயக்கியும் உள்ளார். பல தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

kamalhassan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe