Skip to main content

தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி மறைவால் திரையுலகினர் சோகம்

 

producer Hem Nag Babuji passed away

 

தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார். 'ஹேம் நாக் புரொடக்‌ஷன்ஸ்' சார்பில் ரஜினி நடித்த 'காளி' மற்றும் 'கர்ஜனை' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார். மேலும் ஹேம் நாக் பாபுஜி, படங்களுக்கு ஃபைனான்ஸ் மற்றும் விநியோகமும் செய்துள்ளார். ஹேம் நாக் பாபுஜி சகோதரர்களும் பல படங்களைத் தயாரித்து விநியோகம் செய்துள்ளனர். 

 

இந்த நிலையில் உடல் நலக்குறைவால் தனது 76வது வயதில் மரணமடைந்துள்ள ஹேம் நாக் பாபுஜி மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

கடந்த சில தினங்களாக திரையுலகைச் சேர்ந்த நடிகை ஜமுனா, ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம், இயக்குநர் கே.விஸ்வநாத், டப்பிங் கலைஞர் செல்வராஜ், பரியேறும் பெருமாள் தங்கராஜ், பாடகி வாணி ஜெயராம், இயக்குநர் டி.பி. கஜேந்திரன் எனத் தொடர்ந்து மறைந்துள்ளது திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.