Skip to main content

தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி மறைவால் திரையுலகினர் சோகம்

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

producer Hem Nag Babuji passed away

 

தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார். 'ஹேம் நாக் புரொடக்‌ஷன்ஸ்' சார்பில் ரஜினி நடித்த 'காளி' மற்றும் 'கர்ஜனை' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார். மேலும் ஹேம் நாக் பாபுஜி, படங்களுக்கு ஃபைனான்ஸ் மற்றும் விநியோகமும் செய்துள்ளார். ஹேம் நாக் பாபுஜி சகோதரர்களும் பல படங்களைத் தயாரித்து விநியோகம் செய்துள்ளனர். 

 

இந்த நிலையில் உடல் நலக்குறைவால் தனது 76வது வயதில் மரணமடைந்துள்ள ஹேம் நாக் பாபுஜி மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

கடந்த சில தினங்களாக திரையுலகைச் சேர்ந்த நடிகை ஜமுனா, ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம், இயக்குநர் கே.விஸ்வநாத், டப்பிங் கலைஞர் செல்வராஜ், பரியேறும் பெருமாள் தங்கராஜ், பாடகி வாணி ஜெயராம், இயக்குநர் டி.பி. கஜேந்திரன் எனத் தொடர்ந்து மறைந்துள்ளது திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

குளிர்பானத்தில் மயக்க மாத்திரை - பாலியல் வழக்கில் தயாரிப்பாளர் கைது 

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
producer mohammed ali arrest

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமதி அலி என்பவர் திரைப்படத் தயாரிப்பாளராக இருந்து வந்துள்ளார். தனது தயாரிப்பு நிறுவன அலுவலகத்தை திருவேற்காடு கீழ் அயனம்பாக்கத்தில் நடத்தி வந்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு பெண்ணை வேலைக்கு சேர்த்துள்ளார். அந்த பெண் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் முகமது அலி மீது கடந்த மாதம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், முகமது அலி தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து தன்னை காதலிப்பதாக கூறி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தொல்லை கொடுத்தார். 

மேலும், குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து, தன்னிடம் தவறாக நடந்துகொண்டு அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார். பின்பு கர்ப்பமடைந்த என்னிடம், சத்து மாத்திரைகள் என கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கருவினை கலைத்துள்ளார். அதோடு கருக்கலைப்பு செய்ததை வெளியே சொன்னால், கொலை செய்து விடுவேன் என்றும், தன்னிடம் தவறாக நடந்துகொண்ட போது பதிவு செய்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்றும் மிரட்டி தன்னிடம் ரூ. 5 லட்சம் வரை பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

இது புகாரை பெற்றுக் கொண்ட அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள், புகார் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அந்த பெண் முன்வைத்த குற்றச்சாட்டுகள்
அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் காவல் துறையினர், தயாரிப்பாளர் முகமது அலி மீது
4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story

மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல நடிகர் 

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
Johnny Wactor passed away in robbery incident

ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வந்தவர் நடிகர் ஜானி வேக்டர். ஜெனரல் ஹாஸ்பிட்டல் என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் கடந்த 25ஆம் தேதி அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் அதிகாலை 3.30 மணியளவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு வயது 37.

இது தொடர்பாக ஆங்கில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மே 25ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் ஜானி வேக்டர், சக ஊழியருடன் இருந்த போது மாஸ்க் அணிந்த மூன்று மர்ம நபர்கள் அவரது காரில் உள்ள ஒரு பொருளை திருட முயல்வதைப் பார்த்துள்ளார். அவர்களை நோக்கி போகும் போது மர்ப நபர்களில் ஒருவர், ஜானி வேக்டரரை சுட்டுள்ளார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவம் ஹாலிவுட் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஜானி வேக்டரின் தாயார், ஒரு ஆங்கில ஊடகத்தில், “என் மகன் திருடர்களோடு சண்டையிடவில்லை. இருப்பினும் அவனைச் சுட்டுக்கொன்று விட்டனர். உடனே மூவரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் பற்றிய விவரங்கள் மறைக்கப்பட்டு ஒருவர் கூட இன்னும் கைது செய்யப்படவில்லை” எனக் கூறினார்.